பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஈரோடு, ஈரோடு அடுத்த நாதகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஈரோடு வடக்கு ரோட்டரி கிளப் சார்பில் நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவர்கள் பயன்பாட்டுக்காக, 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மதிய உணவு பாத்திரங்களை கழுவ வாஷ்பேசின், நேர்மை அங்காடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தன் சுத்தம், கை கழுவும் முறை, உடல் நலம் பேணுதல் குறித்து விளக்கப்பட்டது. நேர்மை அங்காடி செயல்படும் விதம், பயன்படுத்தும் முறை குறித்து அறிவுறுத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் செந்தில் குமார் நன்றி கூறினார்.