உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பு.புளியம்பட்டி பாலசாஸ்தா கோவில் ஆண்டு விழா

பு.புளியம்பட்டி பாலசாஸ்தா கோவில் ஆண்டு விழா

புன்செய்புளியம்பட்டி: பாலசாஸ்தா கோவில் 13ம் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.புன்செய்புளியம்பட்டி, அன்ன மடம் வீதியில், 100 ஆண்டு பழமை வாய்ந்த முத்துவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், பாலசாஸ்தா ஐயப்பனுக்கு கோவில் எழுப்பப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இக்கோவிலில் 13ம் ஆண்டு விழா மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவையொட்டி, மங்கள இசையுடன் கணபதி ஹோமம், கலச பூஜை, பாலசாஸ்தாவுக்கு,சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, பச்சப்புள்ள-பவளப்புள்ள பஜனை குழுவினரின், பஜனை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ