உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீவிர கண்காணிப்பில் ரயில்வே பார்சல்

தீவிர கண்காணிப்பில் ரயில்வே பார்சல்

ஈரோடு:சாலை மார்க்கமாக மட்டுமின்றி, ரயில்கள் மூலமும் அரசியல் கட்சியினர், கட்சி பிரமுகர்கள் பரிசு பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பி வைக்க கூடும் என்-பதால், ரயில்வே பார்சல் அலுவலகங்கள், ரயில்களில் செல்லும் பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்து கண்காணிக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.இதன்படி ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுபற்றி ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி கூறியதாவது: ரயில்களில் வரும் பார்சல்கள் சந்தேகப்படும்படியாக இருந்தால் அதை உடனடியாக பிரித்து, யார் அனுப்பி-யது, எங்கு செல்கிறது என தெரிந்து, சம்பந்தப்பட்ட நபரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்து-கிறோம். ஓடும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர், மப்டி போலீசார் பயணிகளை கண்காணிக்கின்றனர். சந்தேகம் இருந்தால் அவர்களது உடமைகளை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். ஈரோட்டில் இருந்து ரயில்களில் ஏற்றப்-படும் பார்சல்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை