உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே ஸ்டேஷன் நுழைவு சாலை அடைப்பு; வாகன ஓட்டிகள் குழப்பம்

ரயில்வே ஸ்டேஷன் நுழைவு சாலை அடைப்பு; வாகன ஓட்டிகள் குழப்பம்

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்-பாட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்-திட்டத்தில் பிரதான சாலையில் இருந்து, ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல இரு நுழைவு வாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு வாயில்க-ளிலும் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே வாகனங்கள் நுழைய இயலாது. ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய ஏற்கனவே ஒரு பழைய வழித்தடம் இருந்தது. மற்றொன்றில் வாகனங்கள் வெளியே வர வேண்டும். இதில் ரயில்வே ஸ்டேஷனுக்குள் வாகனங்கள் நுழைய இருந்த வாயில் முன்புறம் பிரதான சாலையின் நடுவே போலீசார் சென்டர் மீடியன்-களை வைத்துள்ளனர். இதனால் டூவீலர் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. வாகனங்கள் ரயில்வே ஸ்டேஷன் முன்புற சாலையில் சிறிது துாரம் சென்று யு-டர்ன் எடுத்து, பின்னர் இடப்புற-மாக ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய வேண்டும்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: எவ்வித முன்னறிவிப்புமின்றி ரயில்வே ஸ்டேஷன் முன்புற சாலையில் சென்டர் மீடியன் வைத்து அடைத்துள்ளனர். இதனால் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல்தான் ஏற்படும். நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் சென்று வரும் வகையில் சாலையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ