மேலும் செய்திகள்
அந்தியூரில் மிதமான மழை
19-Jun-2025
ஈரோடு, தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், ஈரோடு மாநகரில் வெயிலின் தாக்கம் குறைவதாக இல்லை. இன்னொரு மே மாதமோ? என்று சொல்லும் அளவுக்கே இருந்தது. வருண பகவானும் கருணை காட்டாததால், பகலில் வெப்ப தாக்குதலும், இரவில் புழுக்கமும் அதிகரித்து, துாங்கா இரவுகளை அதிகரித்து வந்தது. மாநகரில் நேற்றும் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மாலை, 4:௦௦ மணிக்கு திடீரென வானம் மேகமூட்டமாக மாறியது. மெதுவாக தொடங்கி சற்றே வலுத்தது. ௪:௩௦ மணி வரை அதே வேகத்தில் பெய்து ஓய்ந்தது. பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, வீரப்பன்சத்திரம், வெட்டுக்காட்டுவலசு, பெருந்துறை ரோடு என மாநகரில் பரவலாக மழை பெய்தது. அதேசமயம் பள்ளி, கல்லுாரி விடும் நேரம் என்பதால், மாணவ, மாணவியர் நனைந்தபடி சென்றனர். நீடித்த கனமழையை மக்கள் எதிர்பார்த்த நிலையில், சற்றே துாறலுக்கும், சாரலுக்கும் நடுவில் பெய்ததோடு, நீண்ட நேரமும் பெய்யாததால், இரவில் புழுக்கம் குறையவில்லை.அந்தியூரில்...அந்தியூர், தவிட்டுப்பாளையம், அண்ணாமடுவு, புது மேட்டூர், கிருஷ்ணாபுரம், சங்கராப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை, 4:30 மணிக்கு தொடங்கிய மழை, அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமாக கொட்டி தீர்த்தது. அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் தாழ்வான சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் மற்றும் கனரா வங்கி ஒட்டிய சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், ரெட்டிபாளையம், ஆயமரத்தோட்டம் சுற்று வட்டார பகுதியில், மாலை, 4:30 மணி முதல், ௫:௦௦ மணி வரை மழை பெய்தது. சென்னம்பட்டி, ஜரத்தல், சனிசந்தை சுற்று வட்டார பகுதியில், 5:௦௦ மணிக்கு தொடங்கிய மழை, இரவு, ௭:௦௦ மணி வரை பெய்தது. கனமழையாக இல்லாமல் துாறாலக நீடித்ததால், வேலை முடிந்து வீடு திரும்பிய மக்கள் அவதிக்கு ஆளாகினர்.சென்னிமலையில்...சென்னிமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். நேற்று மாலை, 5:௦௦ மணிக்கு கனமழை பெய்யத் தொடங்கியது. ஆனால், 20 நிமிடங்களில் ஓய்ந்தது. திடீர் மழையால் சென்னிமலை டவுன் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் இதமான சூழல் ஏற்பட்டது. இதேபோல் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான காளிங்கராயன்பாளையம், லட்சுமிநகர், மேட்டுநாசுவன்பாளையம், குருப்பநாயக்கன்பாளையம், சித்தார், சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளில் மழை பெய்தது.
19-Jun-2025