மேலும் செய்திகள்
வ.உ.சி., பிறந்த நாள்
07-Sep-2025
ஈரோடு, இந்து முன்னணி சார்பில், நிறுவனர் ராமகோபாலன் பிறந்த தினத்தை, ஈரோட்டில் நேற்று இந்து எழுச்சி திருவிழாவாக கொண்டாடி, அவரது உருவப்படத்துக்கு, மாவட்ட செயலர்கள் சங்கர், வக்கீல் முரளி, ரமேஷ், விவேக்குமார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் சென்று மரியாதை செலுத்தி, இனிப்பு, மரக்கன்று வழங்கினர்.* சென்னிமலை ஒன்றிய இந்து முன்னணி சார்பில், ராமகோபாலன், 98வது பிறந்த நாள் விழா, சென்னிமலை குமரன் சதுக்கம் பகுதியில் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் சின்னுசாமி தலைமை வகித்தார். ராம கோபாலன் உருவப்படத்துக்கு, பா.ஜ., மாவட்ட செயலாளர் ஞானவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.* கவுந்தப்பாடியில் இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் சதீஷ், நகர செயலாளர் சத்தியராஜ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி உட்பட பலர், பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.* கோபி நகர இந்து முன்னணி சார்பில், கோபி பஸ் ஸ்டாண்டில், ராமகோபாலன் படத்துக்கு, மேற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், நகர தலைவர் விமல்குமார், நகர பொது செயலாளர் மதன் குமார் உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.
07-Sep-2025