உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மார்க்கெட் கட்டமைப்பு மறு ஆய்வுக்கு அறிவுரை

மார்க்கெட் கட்டமைப்பு மறு ஆய்வுக்கு அறிவுரை

ஈரோடு:ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் காய்கறி மார்க்கெட்டுக்காக கட்டப்பட்ட வணிக வளாகத்தை, கைத்தறி, துணி நுால் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ஆர்.கே.வி.ரோடு வணிக வளாக கட்டமைப்பில் குறைவான கடைகளே உள்ளதால், கூடுதல் கடைகள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை வியாபாரிகளே தயாரித்து வைத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், ஐந்து சங்கங்கள் தலா ஐந்து பேரை தேர்வு செய்து, அனைவரும் ஒருங்கிணைந்து வளாகத்தில் தேவைப்படும் வசதிகள் பற்றிய விபரம் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொங்கலம்மன் கோவில் சந்து உட்பட சாலையோர காய்கறி கடைகள் அனைத்தும் வணிக வளாகத்திற்குள் இடமாற்றம் செய்யப்படும்.இந்த பகுதியில் மார்க்கெட் அமைவதால் காய்கறி வியாபாரிகள் மட்டுமின்றி சுற்றுவட்டார அனைத்து கடைக்காரர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை