உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி கூட்டுறவு விற்பனை சங்கம் முன் சென்டர் மீடியன் வைத்ததால் நிம்மதி

கோபி கூட்டுறவு விற்பனை சங்கம் முன் சென்டர் மீடியன் வைத்ததால் நிம்மதி

கோபி, நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் முன், சென்டர் மீடியன் கற்கள் நேற்று வைக்கப்பட்டது.கோபி--மொடச்சூர் சாலையில், ஜியோன் தியேட்டர் எதிரே உள்ள கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் புதன், சனிக்கிழமை வாழைத்தார், வெள்ளிக்கிழமை தேங்காய் ஏலம் நடக்கிறது. தவிர, விதை நெல் வாங்கவும், நகை கடன் வாங்கவும், அங்கு விவசாயிகள் அதிகளவில் வருகின்றனர். அதேபோல் அதே வளாகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். விவசாயிகள் பெரும்பாலும், தங்களின் வாழைத்தார், தேங்காய்களை சரக்கு ஆட்டோவில் சங்கத்துக்கு கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் தார்ச்சாலை சீரமைப்பு பணிக்காக, சங்கத்தின் முன் மொடச்சூர் சாலையில் இருந்த, சென்டர் மீடியன் கற்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். பணிகள் முடிந்த நிலையில், மீண்டும் அங்கு சென்டர் மீடியன் கற்களை வைக்காததால், விவசாயிகள் சாலையை கடந்து, தேங்காய், வாழைத்தார்களை கொண்டு செல்ல அவதிப்படுவதாக, நமது நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சங்கத்தின் முன், சென்டர் மீடியன் கற்கள் நேற்று வைத்ததால், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !