உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் இந்நிலை நிரந்தரமாக தொடர எதிர்பார்ப்பு

பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் இந்நிலை நிரந்தரமாக தொடர எதிர்பார்ப்பு

ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்டில், நடைபாதை, கட்டண கழிப்பி டம் அருகில் என பல்வேறு பகுதிகளை தள்ளுவண்டி கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்தனர். இதனால் பஸ்கள் வருவதை கூட அறியாமல், ஆபத்தான முறையில் மக்கள் கடைகளில் ஒதுங்கும் நிலை ஏற்பட்டது. பஸ் டிரைவர்களும் சிரமத்தை அனுபவித்தனர்.இது தொடர்பாக சென்ற புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டில் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினாலும், ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. சில நாட்களுக்கு முன் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்டார். அப்போது நகர்ந்து சென்ற கடைக்காரர்கள், சிறிது நேரத்தில் மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கு வந்தனர். ஆளுங்கட்சியினர் செல்வாக்கே இதற்கு காரணம் என்றும், மக்கள் தரப்பில் புகார் எழுந்தது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள், நேற்று பஸ் ஸ்டாண்டில் அதிரடியாக களமிறங்கினர். ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கம்மங்கூழ் கடை, செருப்பு கடை, பூக்கடை என, ௧௦க்கும் மேற்பட்ட கடைக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் நடைபாதை விரிவடைந்துள்ளது. பயணிகளும், மக்களும் இடையூறின்றி நடந்து செல்கின்றனர். இந்நிலை சில நாட்களுக்கு மட்டுமின்றி, எப்போதும் தொடர வேண்டும் என்பதும், மக்களின் கருத்தாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !