அனுமதி பெறாமல் பெருமாள்மலையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
காங்கேயம், காங்கேயம்-திருப்பூர் ரோடு பெருமாள்மலை பகுதியில் சிலர், நெடுஞ்சாலையோரம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், அனுமதியின்றி விநாயகர் கோவில் கட்ட வேலை செய்தனர். அங்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு துறையில் மனு அளித்தனர். இதனால் வருவாய் துறையினரால் அளவீடு செய்தனர். இதில் மலை குன்று பகுதி என வகைப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து காங்கேயம் வருவாய் துறையினர், தங்கள் அனுமதி இல்லாமல் எந்த பணியும் மேற்கொள்ள கூடாது என தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம், 18ம் தேதி இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடந்தது.அதில் முடிவு எட்டப்படாத நிலையில், ஒரு தரப்பினர் ரெடிமேட் கட்டடம் கட்டி, அதில் விநாயகர் சிலையை அமைத்து நேற்று காலை வைத்தனர். தகவலறிந்து காங்கேயம் தாசில்தார் மோகனன், காங்கேயம் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், காங்கேயம் ஆர்.ஐ., விதுர்வேந்தன், சிவன்மலை வி.ஏ.ஓ., சுகன்யா உள்ளிட்டோர் சென்றனர். இது தொடர்பாக, 4 மணிநேரம் பேச்சுபேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து சிலைகள் கிரேன் மூலம் பாதுகாப்பாக எடுத்து மாற்றிடத்தில் வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து அங்கு கூடிய மக்கள் கலைந்து சென்றனர்.