ஜம்பையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
ஜம்பையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்பவானி, செப். 27-பவானி அருகே அரசுக்கு சொந்தமான பொதுப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.பவானியை அடுத்த ஜம்பை கிராமத்தில் சின்னியம்பாளையத்தில், 1216/23 சர்வே எண்ணில் பொதுப்பாதை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த நான்கு பேர் இதை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருந்தனர். அளவீடு செய்து பொதுப்பாதையை மீட்க, ஜம்பையை சேர்ந்த சண்மூகமூர்த்தி, பவானி தாசில்தாரிடம் மனு அளித்தார். இதன் அடிப்படையில் வருவாய் துறையினர் அளவீடு செய்ததில் ஆக்கிரமிப்பு உறுதி செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதை தொடர்ந்து பவானி ஆர்.ஐ., மாதேஸ்வரி முன்னிலையில், 120 மீட்டர் நீளத்தில், நான்கு மீட்டர் அகலத்தில் உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இயந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.