மேலும் செய்திகள்
பச்சை மலையில் மண் சரிவு வாகனங்கள் செல்ல தடை
07-Nov-2024
கோபி, நவ. 30-கோபி அருகே பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவிலுக்கு, மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டு வழியாகவும் செல்லலாம். சில வாரங்களுக்கு முன் பலத்த மழையால், மலைப்பாதையில் உள்ள கோசாலை அருகே, மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கார் போன்ற வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில், எட்டு லட்சம் ரூபாய் செலவில், சீரமைப்பு பணி அறநிலையத்துறை சார்பில் துவங்கியுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட, 25 அடி நீளத்துக்கு, பத்து அடி உயரத்துக்கு கருங்கற்கள் அடுக்கப்படவுள்ளது. இதற்காக நிலமட்டத்தில் கான்கிரீட் போடுவதற்கான பூர்வாங்க பணி நடப்பதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
07-Nov-2024