உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை

டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கை

டிச.,5ல் நீர் திறக்க கோரிக்கைகோபி, நவ. 29-கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை மூலம், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரண்டு பாசனங்களுக்கும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நீர் திறக்க கோரி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபிதளபதி, பவானிசாகர் அணை செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பவானிசாகர் அணை நீர்மட்டம், 97 அடியாக உள்ளது. டிச., மாதம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், கொடிவேரி அணை பாசனத்துக்கு டிச.,5ம் தேதி முதல் நீர் திறக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை