உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டில் திருட முயன்ற ஆசாமிக்கு காப்பு

வீட்டில் திருட முயன்ற ஆசாமிக்கு காப்பு

பவானி: பவானி, காடையாம்பட்டி அருகே வசிப்பவர் குமார். மெஸ் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் புகுந்து, பீரோவை உடைத்து நகை திருட முயன்றுள்ளார். அப்போது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் ஓடி விட்டார். இந்நி-லையில் குமார் வீட்டுக்கு சென்றபோது, கதவு திறக்கப்பட்டு பீரோ கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதேசமயம் பொருட்கள் திருடு போகாதது தெரிய வந்தது. இதுகுறித்து பவானி போலீசில் புகாரிளித்தார். அப்பகுதி சிசிடிவி கேமராக்-களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி ஒட்டப்பட்டியை சேர்ந்த சம்பத்குமார், 38, திருட முயன்றது தெரிய வந்தது. அவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ