உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டுக்குள் சிக்கிய குழந்தை மீட்பு

வீட்டுக்குள் சிக்கிய குழந்தை மீட்பு

ஈரோடு: ஈரோடு, பெரியார் நகர் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியி-ருப்பில் இரண்டாவது தளத்தில் வசிப்பவர் சிவா. இவரின் மகன் குணாள், 2; நேற்று முன்தினம் மதியம் வீட்டு முன்புறம் பெற்றோர் இருந்தநிலையில், விளையாடிக்கொண்டே வீட்டுக்குள் சென்ற குழந்தை தள்ளியதில், இரும்பு கதவு மூடிக்கொண்டது. ஆட்டோமேட்டிக் லாக் என்பதால், சிவா அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தனர். கதவை திறக்க முயன்றும் முடியாததால், ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் ஹைடிராலிக் இயந்திரம் மூலம் அரை மணி நேரம் போராடி கதவை திறந்து குழந்தையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை