சாராய ஊறலுடன் ஓய்வு எஸ்.ஐ., கைது
கோபி, :சாராய ஊறல் வைத்திருந்த ஓய்பெற்ற எஸ்.ஐ.,யை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், சித்தோடு போலீஸ் ஸ்டேசன் எல்லைக்கு உட்பட்ட பஞ்சகி காட்டு தோட்டம் பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். நசியனுார், ராயபாளையத்தை சேர்ந்த ராமலிங்கம், 62, என்பவர், 150 லிட்டர் சாராய ஊறலுடன் பிடிபட்டார். போலீசார் விசாரணையில், அவர் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., என தெரிய வந்தது.