மேலும் செய்திகள்
வருவாய் கிராம உதவியாளர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
19-Apr-2025
ஈரோடு:வருவாய் துறையின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் விஜய் தலைமை வகித்தார். இதேபோல் மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில், வருவாய் துறை சங்க கூட்டமைப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.* அந்தியூர் தாலுகா அலுவலகம் முன், அந்தியூர் வட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமையில், தாசில்தார் கவியரசு, மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், வி.ஏ.ஓ.,க்கள், உதவியாளர்கள், நில அளவர், அலுவலக உதவியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில், மாலை, 4:45 மணி முதல், 5:45 மணி வரை ஒரு மணி நேர வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம், பெருந்துறை வட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் நடந்தது.* நம்பியூர் தாலுகா அலுவலகம் முன், வருவாய் துறை சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ரகு, ஜிலானி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபு, பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.* சத்தி தாலுகா அலுவலகத்தில் தாலுகா ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
19-Apr-2025