மேலும் செய்திகள்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
13-Aug-2025
ஈரோடு: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து, கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.வருவாய் துறை அலுவலர்களுக்கு அதீத பணி நெருக்கடி அளிப்-பதை தவிர்க்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் உட்பட பல்-வேறு புதிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, முழு அளவில் வருவாய் துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இதனால் வழக்கமான பணிகளை செய்ய இயலாத நிலை ஏற்படு-கிறது. எனவே அவற்றுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வலியு-றுத்தினர். மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என, 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்-தனர்.
13-Aug-2025