வருவாய் துறை அலுவலர் சங்கம் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
வருவாய் துறை அலுவலர் சங்கம்2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்ஈரோடு, நவ. 28-தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்று இரண்டாம் நாளாக பணி புறக்கணிப்புடன், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையிலும், ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் விஜய் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு உச்சவரம்பை, 5 சதவீதமாக குறைத்துள்ளதை ரத்து செய்து, 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட அளவில், தாசில்தார் முதல் வருவாய் ஆய்வாளர் நிலை உட்பட, 444 பேர் பணி புறக்கணிப்பை தொடர்ந்துள்ளனர்.