மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம்: 454 மனுக்கள் குவிந்தன
26-Aug-2025
ஈரோடு, வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தால், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை' வாரத்தில், 2 நாட்கள் மட்டும் நடத்த வேண்டும். இம்முகாம் போன்ற சிறப்பு திட்டங்கள், பேரிடர் மேலாண்மை திட்டங்களுக்கு, தனி துணை தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்களை நியமித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள் நேற்று முதல், 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, ஈரோடு மல்லிகை அரங்கில் 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்' நடந்தது. இதில், 13 துறைகளை சேர்ந்த, 45 சேவைகளுக்காக மனுக்கள் பெற தனித்தனியாக அலுவலர்களை நியமித்திருந்தனர். சான்றிதழ்கள், பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு மனுக்களை வழங்க வந்தவர்கள், வருவாய் துறை அலுவலர்கள் முகாமில் பங்கேற்காததால், பிற துறையினரிடம் வழங்கினர். அவர்களுக்கு இம்மனு குறித்த விபரம் தெரியாததால், மனுக்களை மட்டும் பெற்று கொண்டனர்.இதுபற்றி, முகாம் அலுவலர்கள் கூறியதாவது: நேற்றைய முகாமில் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உட்பட, 500க்கும் மேற்பட்ட மனுக்கள் அந்தந்த துறையினரால் பெறப்பட்டன. போராட்டம் நடந்ததால், வருவாய் துறையினர் பங்கேற்கவில்லை. இதனால் வருவாய் துறை சார்ந்த, 67 மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யாமல் பெற்று கொண்டோம். சிலரை தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிவிடும்படியும் சிபாரிசு செய்தோம். முகாம் ஏற்பாடுகளில் வருவாய் துறையினர் செய்ய வேண்டிய பணிகள் கூட, முறையாக செய்யப்படாமல் பாதித்தது. இவ்வாறு கூறினர்.
26-Aug-2025