கெட்டிசமுத்திரம் ஏரிக்கு அதிகரித்து வரும் தண்ணீர்
அந்தியூர், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையிலுள்ள தேவர்மலை வனப்பகுதியில் பெய்த மழையால், வழுக்குப்பாறை வழியாக வெளியேறிய வெள்ளம் எண்ணமங்கலம் ஏரிக்கு சென்றது. இதன் காரணமாக, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, ஏரியின் முழு கொள்ளளவான 11.50 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேற்கு மதகின் வழியாக வெளியேறும் உபரிநீர் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்கிறது. இதனால், வற்றிய குளம் போல காட்சியளித்த ஏரியின் பரப்பளவில், தண்ணீர் அதிகரித்து வருகிறது.