உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை சீரமைப்பு கோரி சாலை மறியல்

சாலை சீரமைப்பு கோரி சாலை மறியல்

கோபி, கோபி அருகே வேட்டைக்காரன்கோவில்-கலிங்கியம் வரையிலான சாலை, கரடு, முரடாகவும், குண்டும், குழியாகவும் உள்ளது. இதனால் தங்கமலைக்கரடு பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள், வேட்டைக்காரன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கோபி போலீசார் மற்றும் வருவாய் துறையினர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய வழிவகை செய்வதாக அதிகாரிகள் உறுதியளிக்கவே அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை