உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் 2 ஆண்டாக நடக்கும் குடிநீர் திட்டப்பணி குழாய் பதிக்க தோண்டிய குழியால் சின்னாபின்னமான சாலைகள்

சென்னிமலையில் 2 ஆண்டாக நடக்கும் குடிநீர் திட்டப்பணி குழாய் பதிக்க தோண்டிய குழியால் சின்னாபின்னமான சாலைகள்

சென்னிமலை:-சென்னிமலை டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகளில், ௮,௦௦௦ குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வீடு தோறும் காவிரி குடிநீர் இணைப்பு வழங்க, மத்திய அரசின் பங்களிப்புடன் அம்ரூத் 2.0 திட்டத்தில், 18.௧௩ கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2022 நவ.,௮ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து நகர பகுதியில், 55 கி.மீ., துார சுற்றளவுக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணியை, 2023 மே, ௧௨ல் தொடங்கினர். இதற்காக இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டது. குடிநீர் குழாய் பதிக்கும் பணியை வரும், ஏப்., ௩0க்குள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்து. இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், பணி நிறைவடைய வாய்ப்பில்லை. அதேசமயம் இப்பணிக்காக, டவுன் பஞ்சாயத்தில் அனைத்து சாலைகளும் தோண்டி போடப்பட்டுள்ளதாக, மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: முதலில் பிரதான குழாய் அமைக்க சாலையோரம் குழி தோண்டினர். இதனால் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் சேதமாகின. சில வாரங்கள் கழித்து பிரதான குழாயில் இருந்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க, சாலையின் குறுக்கே குழி தோண்டினர். இதில் பல இடங்களில் சாலையை சரியாக மூடாததால், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பலர் விழுந்து விபத்தில் சிக்கினர்.சில இடங்களில் குடிநீர் குழாய் அமைக்க பொக்லைன் இயந்திரம் உதவியுடன் குழி தோண்டியபோது ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த குழாய்கள் உடைந்ததால் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வெளியேறியது. தற்போது அனைத்து வீதிகளிலும் குழி தோண்டி சரியாக மூடாததால் குண்டும், குழியுமாக இருப்பதுடன் எங்கு பார்த்தாலும் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. நல்ல திட்டமாக இருந்தாலும் முறையாக செய்யாததால் பல ஆண்டுகள் போராடி போடப்பட்ட தார்ச்சாலை சேதமாகி விட்டது. இதை எப்போது சரி செய்து தருவார்கள் என தெரியவில்லை. இவ்வாறு மக்கள் கூறினர்.இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், செயல் அலுவலர் மகேந்திரன் கூறியதாவது: அம்ருத் திட்டத்தில் இதுவரை, 5,825 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் பதிக்கும் பணி, 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மீதி பணியை விரைவில் முடிக்க, ஒப்பந்ததாரரை வலியுறுத்தி வருகிறோம். குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்ற பிறகு புதிதாக தார்ச்சாலை அமைக்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பி, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை