பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.13 லட்சம் காணிக்கை
கோபி :கோபி அருகே பிரசித்தி பெற்ற, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், பத்து உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. இதில் தங்கம், 36 கிராம், வெள்ளி, 108 கிராம், சவுதி அரேபியா, இரு நோட்டுகள், அரபு நாடுகள், ஐந்து நோட்டுகள், அமெரிக்கா 20 டாலரில் மூன்று, அதே அமெரிக்கா ஐந்து டாலரில் ஐந்து, ஒரு டாலரில் 14, ஆஸ்திரேலியா 50 டாலரில் இரண்டு என பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். தவிர, 13.19 லட்சம் ரூபாயை, பணம் மற்றும் சில்லரை காசுகளாக செலுத்தப்பட்டிருந்தது. கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், பாரியூர் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.