மேலும் செய்திகள்
ரூ.1.46 கோடி பறிமுதல்
04-Apr-2026
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் வரை, 1.46 கோடி ரூபாய் பறிமுதல் செய்திருந்தனர். நேற்று ஈரோடு கிழக்கில், 2 லட்சத்து, 52,100 ரூபாய், ஈரோடு மேற்கில், 82,100 ரூபாய் என, 3 லட்சத்து, 34,200 ரூபாயை பறிமுதல் செய்திருந்தனர். இதனால், 1 கோடியே, 49 லட்சத்து, 31,910 ரூபாயானது. உரிய ஆவணங்கள் வழங்கியதால், 1.45 கோடி ரூபாயை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
04-Apr-2026