உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விசைத்தறி தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி தீபாவளி போனஸ்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி தீபாவளி போனஸ்

வெள்ளகோவில், வெள்ளகோவில் வட்டார தி.மு.க., சிறு விசைத்தறி (அடைப்புக்கூலி) உரிமையாளர் சங்கம் மற்றும் விசைத்தறி தொழிலாளர் சங்கங்களிடையே நடப்பாண்டு தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமை வகித்தனர். இதில் தறி ஓட்டுபவர், பாவு ஓட்டுபவர், நுால் சுற்றுபவர், பாவு பிணைப்பவர், மேஸ்திரி, தார் போடுபவர், நுால் காயப்போடுபவர், பீஸ் மடிப்பவர்களுக்கு போனஸ் தொகை நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது.இதில் வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்கதலைவர், அடைப்பு விசைத்தறி உரிமையாளர் சங்கம், வீரசோழபுரம் விசைத்தறி உரிமையாளர் சங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நடப்பாண்டு, 1.5 கோடி ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்படுகிறது என்று, தி.மு.க., விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை