உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பணி ஆசை காட்டி ரூ.60 லட்சம் மோசடி

அரசு பணி ஆசை காட்டி ரூ.60 லட்சம் மோசடி

ஈரோடு:ஈரோடு, ஜீவானந்தம் சாலை, புதுமை காலனியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்; மாற்று திறனாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி, 47; அங்கன்வாடி பணியாளர். இவர், தனக்கு தெரிந்தவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி, 17 பேர், 60.50 லட்சம் ரூபாய் தந்துள்ளனர். வேலை வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. அவல்பூந்துறையை சேர்ந்த சுரேஷ், 44, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். போலீசார் கிருஷ்ணவேணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை