உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆவணங்கள் இல்லாத ரூ.87,000 பறிமுதல்

ஆவணங்கள் இல்லாத ரூ.87,000 பறிமுதல்

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் செக்போஸ்ட் அருகே, தேர்தல் பறக்கும் படை அதிகாரி நவீன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கை செய்தனர்.நாமக்கல் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ஜவுளி வியாபாரி மயிலானந்தத்திடம், 85,500 ரூபாயை ஆவணங்களின்றி எடுத்து வந்தார். தொகையை பறிமுதல் செய்து, கருவூலத்தில் செலுத்தினர். தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த, 7ம் தேதி முதல் நேற்று வரை, 36 லட்சத்து, 24,560 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 12 லட்சத்து, 93,060 ரூபாயை ஆவணங்கள் அடிப்படையில் திரும்ப ஒப்படைத்தனர். மீதி, 23 லட்சத்து, 31,500 ரூபாய் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ