உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துாய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பவானி;ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர்கள் சங்கம், பவானி நகராட்சி துாய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில், பவானி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏ.ஐ.டி.யு.சி., சங்க தலைவர், பாலமுருகன் தலைமையில், துணைத் தலைவர் செல்லப்பன், மாநில செயலாளர் சின்னசாமி, சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், அனைத்து பகுதி அரசு பணிகளையும் அவுட் சோர்சிங் முறையில், ஒ.எம்.சி.எல்., நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசாணை-225ஐ ரத்து செய்ய வேண்டும். த.வெ.க., தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து ஒப்பந்த துாய்மை பணியாளர்களையும் உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ