உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேலை வியாபாரி சாவில் திருப்பம்: கொலை செய்த மூன்று பேர் கைது

சேலை வியாபாரி சாவில் திருப்பம்: கொலை செய்த மூன்று பேர் கைது

பவானி: சேலை வியாபாரி மர்மச்சாவில் துப்பு துலங்கியது. அவரை கொன்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள ஒலகடம், குலாலர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 70; திருமணம் ஆகாதவர். டெல்லியில், ௧௦ ஆண்டுகளாக சேலை வியாபாரம் செய்து வந்தார். கடந்த, 15 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த, 24ம் தேதி வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்ப-திந்து விசாரித்தனர். உடற்கூறு பரிசோதனையில் கழுத்து நெரிக்-கப்பட்டதில் செல்வராஜ் இறந்தது தெரியவந்தது. இதனால் பவானி டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தேடும் பணி நடந்தது.அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்பு கிடைத்தது. இதன் அடிப்படையில் குருவரெட்டியூர், மேட்டுப்பாளையம் காலனி மணி மகன் அசோக்குமார், 25; குருவரெட்-டியூர், பெரியார்நகர் குருசாமி மகன் திலீப், 20, அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவன் ஆகியோ-ருக்கு தொடர்பிருப்பது தெரிந்து, மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஒலகடத்துக்கு அடிக்கடி சென்று வந்த அசோக்குமார், செல்வராஜ் வீட்டில் நகை, பணம் திருட திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று திலீப், 15 வயது பள்ளி மாணவன் என மூவரும் ஒலகடம் சென்றுள்ளனர். நள்ளிரவில் செல்வராஜ் வீட்டு மொட்டை மாடி வழியாக உள்ளே சென்றுள்-ளனர். கதவுக்கு வெளியே மாணவனை நிறுத்திவிட்டு, இருவரும் வீட்டுக்குள் சென்று நகை, பணத்தை தேடியுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்த செல்வராஜ் இருவரையும் பார்த்து விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், செல்வராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, எட்டு பவுன் நகையை திருடி கொண்டனர். வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்த மாணவ-னுடன் தப்பி சென்றுள்ளனர். இதை மூவரும் ஒப்புக்கொண்-டனர். இவ்வாறு போலீசார் கூறினர். கைது செய்யப்பட்ட மூவ-ரையும், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். எட்டு பவுன் நகையை பறிமுதல் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !