உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தி புலிகள் காப்பகத்தில் இளநிலை உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

சத்தி புலிகள் காப்பகத்தில் இளநிலை உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனுார் வனக்கோட்ட பகுதிகளில், விரிவான மனித - வன விலங்கு மோதல் தணிப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். வன விலங்கு உயிரியல், வனவியல், சூழலியல், சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற கல்வி படித்த, 35 வயதுக்கு உட்பட்ட, மென்பொருள் பயன்பாட்டு அனுபவம் கொண்டோர், https://erode.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, முழு விபரத்துடன், 'துணை இயக்குனர் மற்றும் மாவட்ட வன அலுவலர், சத்தியமங்கலம், புலிகள் காப்பகம், ஆசனுார் வனக்கோட்டம், ஆசனுார்-638401' என்ற முகவரிக்கு வரும், டிச.,1க்குள் அனுப்ப வேண்டும். இப்பணிக்கு, 25,000 ரூபாய் ஒருங்கிணைந்த ஊதியமாக வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை