பத்திர பதிவுத்துறை இணையதளம் முடக்கம்
ஈரோடு, தமிழகத்தில் பத்திர பதிவுத்துறை முற்றிலும் இணைய தளத்துடன் கூடிய முறையில், பதிவு செய்யப்படுகிறது. மாநில அளவில் ஒரே சர்வரில் இப்பதிவுகள் நடப்பதால், ஒவ்வொரு நாளும் பத்திரப்பதிவுக்கு டோக்கன் வழங்கி, பதிவு செய்யப்படும்.ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் டோக்கன் பெற்றவர்கள், பத்திரம் பதிவு செய்வதற்காக நேற்று காலை காத்திருந்தனர். இணைய தளம் முடங்கியதால் பத்திரப்பதிவு நடக்கவில்லை. தினமும், 40 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படும், இந்த அலுவலகத்தில், இணைய தள முடக்கத்தால், ஒரு பத்திரம் மட்டுமே நேற்று பதிவு செய்யப்பட்டது.இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், 'இணையதள முடக்கம் மாநில அளவில் நடந்தது. இன்று சீராகும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.