உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வினாத்தாள் மையத்தில் பாதுகாப்பு

வினாத்தாள் மையத்தில் பாதுகாப்பு

வினாத்தாள் மையத்தில்பாதுகாப்புஈரோடு, அக். 18-பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நாளை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதியுதவி, தனியார் பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 1 மாணவ-, மாணவிகள், ௯,௪௪௩ பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர் பள்ளி, இந்து கல்வி நிலையம், வேளாளர் மகளிர் பள்ளி, பி.வி.பி பள்ளி என, 37 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான வினாத்தாள் ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மையத்தில், சீலிடப்பட்ட அறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை