உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் மிரட்டி விரட்ட முயற்சி சென்றாயன்பாளையம் கிராம மக்கள் புலம்பல்

ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் மிரட்டி விரட்ட முயற்சி சென்றாயன்பாளையம் கிராம மக்கள் புலம்பல்

ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் மிரட்டி விரட்ட முயற்சிசென்றாயன்பாளையம் கிராம மக்கள் புலம்பல்ஈரோடு, நவ. 5-கோபி தாலுகா பெரிய கொடிவேரியை அடுத்த சென்றாயன்பாளையம் கிராமத்தை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:எங்கள் கிராமத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவில் அருகே, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். கூலி தொழிலாளர்களாக உள்ள நாங்கள், சொந்த வீடு, நிலமின்றி நத்தம் புறம்போக்கு பகுதியில் வசிக்கிறோம். இதனால் பட்டா கோரி, 3 ஆண்டுகளுக்கும் மேலாக விண்ணப்பித்து வருகிறோம். ஆனாலும், இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில், நாங்கள் வசிக்கும் பகுதியை சிலர் ஆக்கிரமிப்பதுடன், எங்களை விரட்டும் வகையில் மிரட்டல் விடுக்கின்றனர்.மேலும் கால தாமதம் செய்யாமல், எங்கள் குடியிருப்பு பகுதிக்கு நத்தம் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.* ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆப்பக்கூடல் டவுன் பஞ்., காமராஜர் வீதி மக்கள், மனு வழங்கி கூறியதாவது:எங்களது வீதியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். நாங்கள் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பதால், வீட்டுமனை பட்டா கேட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். பவானி தாசில்தார், கோபி ஆர்.டி.ஓ., பட்டா வழங்குவதாக கூறியும் கிடைக்கவில்லை. அவ்வாறு பட்டா வழங்கப்பட்டால், அரசின் தொகுப்பு வீடு, அரசின் இதர சலுகை பெற இயலும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.* ஆப்பக்கூடல் டவுன் பஞ்., 14வது வார்டு கவுன்சிலர் மா.கம்யூ.,வை சேர்ந்த விஜயலட்சுமி, மனு வழங்கி கூறியதாவது:எனது வார்டு பகுதியில், கவுந்தப்பாடி மெயின் ரோடு, காமராஜர் வீதி, ராஜா வீதி, தபால்காரர் வீதி, மாகாளி வீதி உள்ளிட்ட பகுதிகளில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்களுக்கு, சாக்கடை வசதி, மின் விளக்கு, தார் சாலை, குடிநீர் மற்றும் குப்பை தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காசி விஸ்வநாதர் கோவில் அருகே பவானி ஆற்றுக்கு செல்ல படித்துறை அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ