உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லோக் அதாலத்தில்ரூ.22 கோடிக்கு தீர்வு

லோக் அதாலத்தில்ரூ.22 கோடிக்கு தீர்வு

தாராபுரம், டிச. 15-தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான சக்திவேல் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.இதில், 20 மோட்டார் வாகன வழக்குகள், 78 உரிமையியல் வழக்குகள், 156 குற்றவியல் சிறு வழக்குகள் உட்பட, 258 வழக்குகளுக்கு, 22 கோடியே, 97 லட்சத்து, 69 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. மேலும் எட்டு வங்கி கடன் வழக்குகளுக்கு, 33 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம், 814 பேர் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை