அ.தி.மு.க., மாஜிக்கு பதவி தந்ததால் அதிர்ச்சி பெருந்துறை தி.மு.க., செயலாளர் ராஜினாமா?
ஈரோடு:அ.தி.மு.க.,வில் இருந்து வந்த முன்னாள் அமைச்சருக்கு, மாவட்ட செயலாளர் பதவி வழங்கி-யதால், பெருந்துறை ஒன்றிய தி.மு.க., செயலாளர் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளது, கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்-ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி தொகுதிகளை ஒன்றி-ணைத்து தி.மு.க.,வில் சமீபத்தில் மத்திய மாவட்ட பொறுப்-பாளர் பதவி உருவாக்கப்பட்டது.அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் பெருந்துறை ஒன்றிய தி.மு.க., செயலாளராக உள்ள கே.பி சாமி, 59, தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தி-ருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதனால் தி.மு.க.,வில் பரப-ரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு பதவி வழங்கப்பட்-டுள்ளது.ஆனால், நீண்ட காலமாக பல்வேறு சோதனை காலங்களில் கட்-சியை வழி நடத்தியவர் கே.பி.சாமி. கடந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலத்தால், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. அ.தி.மு.க., தொகுதியை கைப்பற்றியது.இந்நிலையில் அவருக்கு கட்சிப் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கே.பி.சாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். கட்சியில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார். இவ்வாறு கூறினர்.இதுகுறித்து ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி கூறியதாவது:இதுகுறித்து கட்சி தலைமை மற்றும் அமைச்சர் முத்துசாமியி-டமும் சொல்லி விட்டேன். இரண்டு நாட்கள் கழித்து உங்களுக்கு தெரிவிக்கிறேன். கடந்த, 45 ஆண்டாக கட்சியிலும், 30 ஆண்-டாக பொறுப்பிலும், 25 ஆண்டாக ஒன்றிய செயலாளர் பதவியும் வகிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.