மேலும் செய்திகள்
சஷ்டி பூஜை
19-May-2025
சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருப்புகழ் அருளிய அருணகிரிநாதர், கந்த சஷ்டி கவசம் அருளிய பால தேவராயர் சுவாமிக்கு, தனி சன்னதி அமைக்க, முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து இருவருக்கும் தனி சன்னதி கட்டும் பணிக்கு, ௯ லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிச., 20ல் முதல்வர் ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார். கல் செதுக்கும் பணி தொடங்கி நடந்த நிலையில், கோவில் வளாகத்தில் கட்டுமான பணி, 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் சன்னதியில் இருவரின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படும்.
19-May-2025