உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெரியம்மை நோய் தாக்குதலால் அச்சம் கால்நடை புலனாய்வு பிரிவு மருத்துவ குழு ஆய்வு

பெரியம்மை நோய் தாக்குதலால் அச்சம் கால்நடை புலனாய்வு பிரிவு மருத்துவ குழு ஆய்வு

டி.என்.பாளையம், டிச. 24--டி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான டி.ஜி.புதுார், கொங்கர்பாளையம், பங்களாபுதுார், புஞ்சை துறையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு மாடுகள், எல்.எஸ்.டி., எனப்படும் பெரியம்மை நோய் தாக்கி, உடல் நிலை மோசமாகி வருகின்றன. சில இடங்களில் கன்றுகள் இறந்து விட்டதாகவும், கால்நடை வளர்ப்போர் அச்சம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வந்தது. இதன் எதிரொலியாக ஈரோடு கால்நடை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கண்ணன் தலைமையிலான குழுவினர், பெரியம்மை நோய் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளில், நேற்று ஆய்வு செய்தனர்.முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். பின் நோய் தாக்குதலுக்கு உள்ளான மாடு மற்றும் கன்றுகளின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். பரிசோதனையின் முடிவில் நோயின் தன்மை கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆய்வின் போது பங்களாபுதுார் கால்நடை மருத்துவர் பகவதி, உதவி மருத்துவர்கள் சந்தோஷ், சென்னியங்கிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி