மேலும் செய்திகள்
சலுான் கடைக்காரர் கார் மோதியதில் பலி
06-Jun-2025
ஈரோடு, ;ஈரோட்டில் பெருந்துறை சாலையில், ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் செயல்படுகிறது. இங்கு அதிகமாக மரங்களும், புல்வெளியும் உள்ளது. நேற்று முன்தினம் வளாகத்தில் பாம்பு சென்றதை கட்சியினர் கவனித்தனர். இதுகுறித்து பாம்பு பிடிக்கும் வீரர் யுவராஜுக்கு தகவல் தரப்பட்டது. ஒரு மணி நேரம் தேடியதில், செடிக்குள் பதுங்கியிருந்த, 11 அடி நீள மஞ்சள் சாரை பாம்பை பிடித்தார். பாம்பின் வயிற்றுக்குள் முட்டை இருந்ததால், பாதுகாப்பாக முட்டையிடுவதற்காக வளாகத்துக்குள் வந்திருக்கும் என தெரிவித்தார். ஈரோடு ரோஜா நகரில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார். காப்புக்காட்டில் வனத்துறையினர் விடுவித்தனர்.
06-Jun-2025