உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூடுதல் கட்டடம் கட்ட மண் பரிசோதனை

கூடுதல் கட்டடம் கட்ட மண் பரிசோதனை

ஈரோடு: ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில், கூடுதல் கட்டடம் கட்ட, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக, ஈரோடு வந்த முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து எஸ்.பி., அலுவலக வளா-கத்தில் மண் பரிசோதனை நேற்று நடந்தது. இதை தொடர்ந்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திலும், 8.03 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எஸ்.பி., அலுவலக வளாகத்தில் கட்டப்-பட உள்ள கூடுதல் கட்டடத்தில், தரைத்தளத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும். இரண்டு தளங்கள் அமைக்கப்படும். தீயணைப்பு நிலையத்தில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள், கன்ட்ரோல் ரூம் இருக்கும். முதல் தளத்தில் நிலைய அலுவலகம், இரண்டாம் தளத்தில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலகம் செயல்படும் வகையில், கட்டடம் கட்டப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !