உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம்; போலீசில் தந்தை புகார்

மகன் மாயம்; போலீசில் தந்தை புகார்

பவானி,பவானி, பழனிபுரம் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் முத்துகுமரன், 31. திருமணமானவர். இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் வங்கியில், துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஹைதராபாத்திற்கு பயிற்சிக்கு சென்று விட்டு, 10 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் கடந்த 9ல், பவானியில் இருந்து விழுப்புரத்துக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இவரது தந்தை சம்பத்குமார், முத்துகுமரனுக்கு போன் செய்த போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஒரு வாரம் கழித்து வங்கிக்கு போன் செய்த போது, வேலைக்கே வரவில்லை என கூறியுள்ளனர். பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகனை கண்டுபிடித்து தருமாறு, முத்துகுமரன் தந்தை அளித்த புகார்படி, பவானி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !