உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாயை கொன்ற மகனை தேடும் தனிப்படை

தாயை கொன்ற மகனை தேடும் தனிப்படை

சென்னிமலை, வெள்ளோடு அருகே மு.அனுமன் பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி தனபாக்கியம், 55; வேமாண்டம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவி. இவரின் இளைய மகன் சந்தோஷ் ராஜா, 40; கடந்த, 29ம் தேதி இரவு, தாயாரிடம் சொத்து கேட்டு தகராறு செய்தார். அப்போது சுத்தியலால் சரமாரியாக தாக்கியதில், தனபாக்கியம் இறந்தார். சம்பவத்தை தொடர்ந்து தப்பி ஓடிய கொலைகார மகனை பிடிக்க, அரச்சலுார் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் சந்தோஷ் ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ