உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநில கலைத்திருவிழா போட்டி தொடக்கம்

மாநில கலைத்திருவிழா போட்டி தொடக்கம்

ஈரோடு, ஜன. 4-பள்ளி கல்வித்துறை சார்பில், 9, 10ம் வகுப்பு அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி ஈரோட்டில் நேற்று தொடங்கியது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். இன்றும் போட்டி நடக்கிறது. மொத்தம், 4,811 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இக்கலை திருவிழா போட்டிகள், 'சங்கமிப்போம் சமத்துவம் படைப்போம்' என்ற மையக்கருத்துடன் நடக்கிறது. அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் பங்கேற்பதால், போட்டிகள் பல்வேறு பள்ளிகளில் பிரித்து நடத்தப்படுகிறது.விழாவில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், மேயர் நாகரத்தினம், மாவட்ட பஞ்., தலைவர் நவமணி, துணை மேயர் செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை