ஆற்றில் மூழ்கி பலியான மாணவி 349 மதிப்பெண்
தாராபுரம், தாராபுரம், வடதாரையை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியரின், 15 வயது மகள், கடந்த, 8ல், உறவினர்களுடன் அமராவதி ஆற்றில் குளித்த போது, ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். நேற்று வெளியான தேர்வு முடிவில் அந்த மாணவி, 349 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது தோழிகள் மத்தியில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியது.