உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவி விபரீத முடிவு

மாணவி விபரீத முடிவு

ஈரோடு:ஈரோடு கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்த கிருஷ்ணன் மகள் பிரியதர்ஷினி, 17; கோவை தனியார் கல்லுாரி மாணவி. பவானியில் வசிக்கும் போது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவருடன் பேசி பழகியுள்ளார்.இதையறிந்த தாய் மகளை கண்டித்துள்ளார். கல்லுாரி விடுமுறை என்பதால், 11ம் தேதி பிரியதர்ஷினி தன் வீட்டுக்கு வந்தார். 12ம் தேதி அதிகாலை அறையில் துாக்கிட்டு கொண்டார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை