அரசு விதை பண்ணையில் ஆய்வு
ஈரோடு: பவானி அடுத்த குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, அரசு விதைப்பண்ணையில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு, 1.95 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், 250 மெட்ரிக் டன் கொள்ளளவு, விதை சுத்திகரிப்பு இயந்திரத்துடன் கூடிய, விதை சேமிப்பு கிடங்கு கட்டடப்பணியை பார்வையிட்டார். உற்பத்தி செய்யப்பட்ட வம்பன் 8 ரக விதைகளின் சுத்திகரிப்பு பணிகளையும் பார்வையிட்டு, தரம் குறித்து கேட்டறிந்தார்.விவசாயிகளுக்கு உரிய காலத்தில் விதை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டுமான பணிகளை விரைவாக முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறும், கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கனிமொழி, வேளாண்மை அலுவலர் முருகேசன் மற்றும் உதவிப்பொறியாளர் கவுதம் உடனிருந்தனர்.