உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேபி வாய்க்காலை துார்வாரி நிரந்தர தீர்வு காண ஆய்வு

பேபி வாய்க்காலை துார்வாரி நிரந்தர தீர்வு காண ஆய்வு

ஈரோடு, ஈரோடு காளிங்கராயன் வாய்க்காலில், மாநகராட்சி பகுதி கழிவு, ஆலை கழிவு கலப்பதை தடுக்க, பேபி வாய்க்கால் கட்டப்பட்டது. இதில் தேங்கி கிடந்த கழிவுகளை சில மாதத்துக்கு முன், மாவட்ட நிர்வாகம் சார்பில், 26 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரினர். மீண்டும் பிளாஸ்டிக் கழிவு, செடி, கொடி, ஆலைகளின் திடக்கழிவால் முழுமையாக அடைபட்டுள்ளது. இதை முழுமையாக அகற்றி கழிவு நீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பேபி வாய்க்காலை துார்வாரி, நிரந்தர தீர்வு காணும் வகையில் மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், வைராபாளையம், பி.பெ.அக்ரஹாரம் வரை நேற்று ஆய்வு செய்தார். எந்தெந்த இடங்களில் குப்பை, கழிவு சேர்கிறது, தேக்கமடைகிறது, எவ்வாறு வெளியேற்றுவது, தடுக்கும் வழிகள் குறித்து கேட்டறிந்தார். விரைவில் அதை செயல்படுத்துவதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை