உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணை அஞ்சலகம் சோலாரில் திறப்பு

துணை அஞ்சலகம் சோலாரில் திறப்பு

ஈரோடு, ஈரோட்டை அடுத்த சோலாரில் அமைக்கப்பட்ட, புதிய துணை அஞ்சலகம் தொடக்க விழா நேற்று நடந்தது. இது, மாவட்டத்தின், 61 வது துணை அஞ்சலகமாகும். ஈரோடு அஞ்சல் கோட்ட மதுநிலை கண்காணிப்பாளர் கோபாலன் தலைமை வகித்தார். மேற்கு மண்டல அஞ்சல் இயக்குனர் அகில் நாயர், அஞ்சலகத்தை திறந்த வைத்தார். இங்கிருந்து ஸ்டாம்ப், விரைவு தபால், பார்சல் சேவை, மணியார்டர், அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கு உட்பட பிற சேவைகளும், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டப்பணிகளும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ