தாலுகா ஆபீஸில் திடீர் ஆர்ப்பாட்டம்
அந்தியூர்: அந்தியூர் அருகே நகலுார், கொண்டையம்பாளையத்தை சேர்ந்த மக்கள், 20க்கு மேற்பட்டோர், அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அந்தியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: கொண்டையம்பாளையத்தில், 50 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசிக்கிறோம். இந்த இடம் வெறு ஒருவரின் பெயரில் உள்ளது. ஆனாலும் குடிநீர், வீட்டு வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில் இடத்தின் உரிமையாளர், சென்ட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும். அதுவரை வாடகை தர வேண்டும். இல்லையேல் இடத்தை விட்டு காலி செய்யுங்கள் என்று எச்சரித்துள்ளார். இவ்வாறு கூறினர். கோரிக்கையை எழுதி தாசில்தாரிடம் மனுவாக கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி தாசில்தார் கவியரசிடம் மனு வழங்கி சென்றனர்.