சத்தியமங்கலம் பகுதியில் திடீர் மழை
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம், வடவள்ளி, கே.என்., பாளையம், சிவியார் பாளையம், தாசரி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று இரவு 8:30 மணியளவில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய தொடங்கியது. 9:15 மணி வரை பெய்தது. பின்பு இடைவெளி விட்டு, 9:30 மணிக்கு மீண்டும் பெய்த மழை தொடங்கியது. திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வழிந்தோடியது.